×

சூறைக்காற்றுடன் கனமழை

ராசிபுரம், மே 10: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை முதல், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை 10 மணி முதல் 2 மணி வரை மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. அதற்கு மேல் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்யத்துவங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான பட்டணம், புதுப்பாளையம், சந்திரசேகரபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. வெண்ணந்தூரில் மழையின் போது சூறைக்காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்தது. இந்த திடீர் மழையால் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post சூறைக்காற்றுடன் கனமழை appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal district ,Tornado ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...